விசாரணைக்கு அழைத்து சென்ற மாணவியிடம் மானபங்க முயற்சி: சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

வயநாடு: கேரள மாநிலம், வயநாடு  அருகே அம்பலவயல் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியை, சமூக வலைதளம்  மூலம் பழக்கமான ஒருவர், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று  பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக மாணவியின் உறவினர்கள் அம்பலவயல்  போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். சில தினங்களுக்கு  முன்பு அம்பலவயல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சோபின், பாபு மற்றும் ஒரு பெண் போலீஸ்  உள்பட 3 போலீசார் மாணவியை ஊட்டி உள்பட பலாத்காரம் நடந்த இடங்களுக்கு  அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், கேரளா திரும்பும் வழியில்  சப்-இன்ஸ்பெக்டர் பாபு அந்த மாணவியை கையை பிடித்து இழுத்து மானபங்கம்  செய்ய முயன்றார். மேலும், அவருக்கு தெரியாமல் செல்போனில் போட்டோவும்  எடுத்து உள்ளார். விசாரணை முடிந்து வயநாடு திரும்பிய பிறகு,  மாணவியை போலீசார் அங்குள்ள குழந்தைகள் நல மையத்தில் ஒப்படைத்தனர். அப்போது  மாணவிக்கு கவுன்சலிங் நடந்தது. அதில் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் மானபங்கம்  செய்ய முயன்றது குறித்து மாணவி கூறி உள்ளார். இது குறித்து குழந்தைகள் நல  மையத்தினர் வயநாடு மாவட்ட எஸ்பி ஆனந்திடம் புகார் செய்தனர். அது பற்றி உடனே விசாரிக்கும்படி, வயநாடு டிஎஸ்பி.க்கு அவர் உத்தரவிட்டார். இந்த  விசாரணையில், மாணவியை பாபு  மானபங்கம் செய்ய முயன்றது உறுதியானது. இதையடுத்து, பாபுவை சஸ்பெண்ட் செய்யவும், அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு  பதிவு செய்யவும் கண்ணூர் சரக டிஐஜி ராகுல் உத்தரவிட்டார். மேலும், அவருடன்  சென்ற பெண் போலீஸ் உள்பட  2 போலீசார் மீது விசாரணை நடத்தவும்  உத்தரவிட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், பாபு தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் பாபு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது….

Related posts

ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்கள் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிக்கு வாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு