விக்கிரவாண்டி தொகுதியில் நீலகிரி திமுகவினர் பிரசாரம் கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் கன மழை கரடி தாக்கி பெண் தொழிலாளி படுகாயம்

கோத்தகிரி, ஜூலை 4: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, சாலைகள், தேயிலை தோட்டங்கள் போன்ற பகுதிகளில் கரடி உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கொட்டக்கம்பை பகுதியில் தேயிலை தோட்டத்தில் பணிக்கு சென்ற பெண் தொழிலாளியான லட்சுமி (57) என்பவரை தேயிலை தோட்டத்தில் மறைந்திருந்த கரடி தாக்கி உள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை கூச்சலிடவே, சக தொழிலாளர்கள் உடனே லட்சுமியை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கோத்தகிரி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை