விஏஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, ஜன.6: பாலக்கோடு தாலுகா அலுவலகம் முன்பு, விஏஓ.,க்கள் சார்பில், தமிழக அரசு டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி விபரங்களை பதிவேற்றத்தை கண்டித்து, வட்டத் தலைவர் மாதேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் டிஜிட்டல் முறையில் பயிர் சாகுபடி விபரங்களை பதிவேற்றம் செய்து, ஆவணப்படுத்தும் பணியை, வருவாய்த் துறையினர் வாயிலாக மேற்கொள்ள தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஏற்கனவே பணிச்சுமை உள்ள நிலையில், வலுக்கட்டாயமாக செய்ய வற்புறுத்தும் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வட்ட செயலாளர் சின்னசாமி, வட்ட பொருளாளர் கலைச்செல்வன் மற்றும் கிளை நிலை அலுவலர்கள் என 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்