வாளையார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

*கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் வாளையார் ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.கேரளாவில் முக்கிய எல்லைச் சோதனைச்சாவடிகளில் ஒன்று வாளையார். இந்த சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு அதிகப்படியான சரக்கு லாரிகள் கேரளாவிற்குள் நுழைகின்றன. வாளையார் ஆர்டிஓ சோதனைச்சாவடியில் அதிகாரிகள் லஞ்சம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணித்தனர். நேற்று சோதனைச்சாவடியில் அதிரடியாக சோதனை நடந்தது. 24 மணி நேரத்தில் அரசு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்து 250 ரூபாய் ஆகும். ஆனால் வசூல் கட்டணத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 725 அதிகப்பணம் இருந்தன. அதிகபட்சமாக இருப்புத்தொகை கேட்டபோது சரக்குலாரி டிரைவர்களிடம் லஞ்சமாக பெற்ற பணம் என்று தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த அதிரடி சோதனையில் பாலக்காடு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஷம்சுதீன் தலைமையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன், எஸ்ஐக்களான மனோஜ்குமார், முகமது சலீம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்