வால்நட்ஸ் பிஸ்கெட்

செய்முறைஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு நன்கு தேய்க்கவும். பின் அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதில், மைதா, பேக்கிங் பவுடர், ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை போட்டு நன்கு கைகளால் கலக்கவும். பின் ரீபைண்ட் ஆயிலை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும். இப்போது வால்நட்ஸ் தூள் சேர்த்து நன்கு பிசையவும். மாவை கொஞ்சம் எடுத்து உள்ளங்கையில் வைத்து உருட்டினால் மாவு உருண்டை விரிசல் இல்லாமல் இருக்க வேண்டும். இதுதான் பிஸ்கெட் மாவு பக்குவம். பின் அதை உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி பிஸ்கெட் வடிவத்திற்கு கொண்டு வரவும். அதன்மேல் வால்நட்டை இரண்டாக உடைத்து வைத்து ப்ரீ ஹீட்டட் அவனில் 10 முதல் 15 நிமிடம் 150 டிகிரி வெப்பத்தில் வேகவைத்து எடுத்து ஆறியபின் பரிமாறவும். குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உகந்த சுவையான ஆரோக்கியமான வால்நட்ஸ் பிஸ்கெட் ரெடி.

Related posts

மேங்கோ மலாய் கேக்

ஜவ்வரிசி அல்வா

ரவா தேங்காய்ப்பால் அல்வா