வாலிபரை கம்பியால் தாக்கிய 2 பேர் கைது: முக்கிய குற்றவாளி தலைமறைவு

ஆவடி: ஆவடி அருகே ஒரு வாலிபரை இரும்பு கம்பியால் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்த சோராஞ்சேரி, அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் சாமுவேல் (22). தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு காமராஜர் நகர் ஆற்றுப் பாலம் அருகே சாமுவேல் நடந்து சென்றிருக்கிறார். அப்போது அவரை மர்ம நபர்கள் இரும்பு கம்யால் சரமாரி தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இப்புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாமுவேலை தாக்கியது பட்டாபிராம் வீரன் (20), ஸ்டாலின் (24), வடமாநில வாலிபர் சாகிப் (22) எனத் தெரியவந்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை பட்டாபிராம், சேக்காடு அருகே இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், எஸ்ஐ துரை தலைமையில் போலீசார் நேற்று முன் தினம்  தீவிர வாகன சோதனை நடத்தினர். அவ்வழியே பைக்கில் சந்தேக நிலையில் 2 மர்ம நபர்களை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டுவந்னர். விசாரணையில், இருவரும் வீரன், சாகிப் என்பதும், இவர்கள் சாமுவேலை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமைறைவான ஸ்டாலினை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம்

92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்: போக்குவரத்து மாற்றம்