வாலாஜாபாத் ஊருக்குள் திடீர் வெள்ளப்பெருக்கு: ஊர்ந்து சென்ற வாகனங்கள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பாலாற்று வெள்ள நீர் வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றுமாலை திடீரென பாலாற்று வெள்ளநீர் அதிகரித்து காணப்பட்டது. தண்ணீர் ஊருக்குள் வந்து வாலாஜாபாத் காஞ்சிபுரம் சாலை, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வணிக வளாகங்கள், பேருந்து நிலையம் அருகில் அதிக அளவில் தேங்கியிருந்தன. இந்த வழியாக செல்லும் கார் ,பைக் லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் ஊர்ந்து சென்றன. இப்பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மீண்டும் பாலாற்று படுகையில் வெள்ள நீர் அதிகரித்து காணப்படுகிறது என்ற தகவல் காட்டுத்தீ போல் சுற்றுவட்டார பகுதி முழுவதும் பரவியது.இதனால் இப்பகுதி வெள்ளப்பெருக்கை காண நூற்றுக்கணக்கானோர் இரு சக்கர வாகனங்கள் மூலம் குடும்பம் குடும்பமாக வந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதற்குப் பிறகு தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று காலை முதல் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு வெகுவாக குறைந்த நிலையில் திடீரென நேற்று மாலை முதல் அதிகரித்து காணப்பட்டது இப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது….

Related posts

இளைஞர் தீக்குளிப்பு – 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம்

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு