வாரச்சந்தையில் அடாவடி செய்த செயல் அலுவலரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சாயல்குடி, நவ.30: சாயல்குடி பேரூராட்சி வாரச்சந்தையில் கடந்த சனிக்கிழமை கருவாடு வியாபாரம் செய்த மாற்றுத்திறனாளி மாரியம்மாள் என்பவரின் கருவாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் சேகர் கீழே கொட்டினார். புகாரின் அடிப்படையில் அவரை ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தற்காலிக பணிநீக்கம் செய்தார்.

இந்த நிலையில் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலகர் சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாயல்குடியில் மூக்கையூர் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி தாலுகா தலைவர் நூர் முகமது தலைமை வகித்தார்.

மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் அகில இந்திய செயலாளர் நம்பிராஜன் பேசினார். கடலாடி மேற்கு தாலுகா குழு செயலாளர் முத்துச்சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணகி, விவசாய சங்க நிர்வாகி மயில் வாகணன் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் முத்துராமலிங்கம், சிபிஎம் முதுகுளத்தூர் தாலுகா குழு செயலாளர் முருகன் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை