வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மனு

சேலம், ஆக. 20: தாரமங்கலம் நகராட்சி சரஸ்வதி நகரைச் சேர்ந்த மக்கள், கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தாரமங்கலம் ஏரியிலிருந்து ஓடை விநாயகர் கோயில் வரை 4 கண் மதகு உள்ளது. அந்த வழியாக 8 மீட்டர் அகலத்திற்கு ஏரி உபரிநீர் சென்று வந்தது. ஆனால் தற்போது அந்த ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏரி உபரிநீர் ஓமலூர் சாலைக்கு வருகிறது. தற்போது குடியிருப்பு வழியாக வாய்க்கால் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதனால் 60க்கும் மேற்பட்ட பட்டா குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றி, உபரிநீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு