வாடகை ஒப்பந்தம் இல்லாமல் இயங்கும் வங்கியை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரியலூர்,செப்.5: அரியலூர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நீதின்ற உத்தரவை மீறி வாடகை ஒப்பந்தம் இல்லாமல் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி (யூனியன் பாங்க் ஆப் இந்தியா) மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரியலூர் மேலஅக்ரஹாரம் தெருவை சேர்ந்த தினேஷ்குமார், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் நேற்று மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் எனக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டி கடந்த 2011-ம் ஆண்டு 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து, யூனியன் பாங்க் ஆப் இந்தியா என்ற வங்கிக்கு வாடகைக்கு கொடுத்தேன்.

10 ஆண்டுகள் முடிந்த நிலையில், வங்கி நிர்வாகம் வங்கியை காலி செய்யாமல் உள்ள நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கில் வங்கியை காலிசெய்யக்கோரி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் வங்கி நிர்வாகம் இதுவரை வங்கியை காலி செய்யாமல் உள்ளது. எனவே எனது இடத்தில் எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இயங்கி வரும் வங்கியை காலி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை