வாடகைத்தாய் என்பது சிக்கலான விஷயமா?; வரலட்சுமி பதில்

சென்னை: சமந்தா நடித்துள்ள ‘யசோதா’ என்ற பான் இந்தியா படம், வரும் 11ம் தேதி திரைக்கு வருகிறது. இது வாடகைத்தாய் சம்பந்தப்பட்ட கதை. இதில் பண ஆசை பிடித்த டாக்டர் வேடத்தில் நடித்துள்ள வரலட்சுமி கூறியதாவது: நல்ல கேரக்டர் கிடைக்கும்போது, அதை எனக்கு நானே சவாலாக நினைத்து நடிப்பேன். இப்படத்தில் எனது கேரக்டர் சமந்தாவுக்கு இணையாகப் பயணிக்கும். யசோதாவுக்கு கண்டிப்பாக ஒருவரது உதவி தேவை என்ற நிலையில்தான் எனது கேரக்டர் என்ட்ரியாகும். அறிவியல் புனைவுக்கதை கொண்ட இதில், வாடகைத் தாய் மையத்தின் தலைவராக நடிக் கிறேன். வசதியாக வாழ அதிகமான பணத்தை விரும்பும் பெண்ணாக வரு கிறேன். என் நிஜ குணம், வாழ்க்கை முறை, உடுத்தும் உடை உள்பட பல்ேவறு விஷயங்களில் என்னுடைய கேரக்டர் மாறுபட்டிருக்கும். படத்தில் வாடகைத்தாய் பற்றிய பகுதி இருக்கிறது. வாடகைத்தாய் என்பது ஒரு சிக்கலான விஷயம் இல்லை. சில நடிகர்கள் அதை முயற்சித்ததால் பெரிய விஷயமாகி விட்டது. வாடகைத்தாய் முறையிலுள்ள நன்மை, தீமையைப் பற்றி விவாதிக்கவில்லை. இதுபோன்ற சிலரும் உண்மையில் இருக்கிறார்கள் என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். சென்னையில் சமந்தாவை சந்தித்ததில் இருந்து, கடந்த 10 வருடங்களாக அவரை எனக்கு தெரியும். ஷூட்டிங்கில் செம ஜாலியாக இருந்தோம். அவர் ஒரு வலுவான பெண்மணி. இப்படத்தில் அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்