வாக்கு என்ன ஒரு மாத இடைவெளி பாதுகாப்பாக இருக்குமா மின்னணு இயந்திரங்கள்?.. தலைமை தேர்தல் சத்யபிரத சாகு பதில்

சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோன்று கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் சென்னையில் மிகக் குறைவாக 59.40 சதவீத வாக்குகளும், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 78 சதவீத வாக்குகளும் பதிவாகின. பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள், சீல் வைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள 75 ‘ஸ்ட்ராங் ரூமில்’ பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையர், தமிழக தேர்தல் குறித்து தனியார் செய்தி சேனலுக்கு விளக்கம் அளித்தார். * வாக்கு என்ன ஒரு மாத இடைவெளி பாதுகாப்பாக இருக்குமா மின்னணு இயந்திரங்கள்?சென்னை வேளச்சேரியில் EVM இயந்திரத்தை பாக்கில் எடுக்கப்பட்டது தொடர்பாக முழு விவரம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு படி நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பிரச்சனைகள் சிறிய அளவிலானவை. மின்னணு இயந்திரங்களுக்கு பாதுகாப்பாக சிஏபிஎப், மாவட்ட போலீசார், அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், சிசிடிவி மூலமாக அரை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு பாதுகாப்பு உள்ளதாக வேறு ஏதேனும் ஏற்பட வாய்ப்பில்லை என கூறினார். * கடந்த 2016 தேர்தலை காட்டிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? பல தொகுதிகளில் 80%, 83% வந்துள்ளது. ஒரு சில நகரங்களில் குறைவாக வாக்குப்பதிவாகியுள்ளது. கொரோனா காலத்தில் இவ்வளவு பேர் வாக்களித்தது பெரிய விஷயமாக தான் பார்க்கப்படுகிறது. இது ஒரு வெற்றி என்றே கூறுவேன் என கூறினார். * பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தேர்தல் ஆணையம் திணறியது ஏன்? தேர்தல் ஆணையத்தின் நோக்கம் ஜனநாயகம் முறையில் தேர்தல் நடத்துவதே. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தரப்பில் பல நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணப்பட்டுவாடா குறித்து புகார் வந்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் இன்னும் வரும் தேர்தலில் தீவிரமாக்கப்படும் என கூறினார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை