வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் பணம் கொண்டு செல்லும் விதிகளை தளர்த்த வேண்டும்

அரவக்குறிச்சி, ஏப். 20: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் பணம் கொண்டு செல்லும் விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்து விட்டது. தேர்தல் விதிமுறைகளின்படி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக்கூடாது என்றிருந்தது. அதற்கு மேல் கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் காரணமாக சிறு வியாபாரிகள், முருங்கை வியாபாரி, ஆடு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் வியாபாரத்திற்கு பணம் கொண்டு போக முடியாமல் அவதிப்பட்டு வியாபரத்தையே நிறுத்தினர். இதனால அவர்கள வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்து விட்டது. எனவே தேர்தல முடிந்து விட்டதால், பணம் கொண்டு செல்லும் விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்