வாக்குச்சீட்டு முறை கோரி ஆளுநர் மாளிகை முற்றுகை: பெண்கள் கைது

 

தாம்பரம், ஜூலை 14: வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி, மதுரையில் இருந்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வந்த பெண்களை, போலீசார் தாம்பரத்தில் கைது செய்தனர். மதுரையை சேர்ந்தவர் நந்தினி. இவரது சகோதரி நிரஞ்சனா என்பவருடன், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக, நேற்று முன்தினம் மதுரையில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்துள்ளார்.

தகவலறிந்த தாம்பரம் போலீசார் இரவு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று, ரயிலில் இருந்த 2 பேரையும் கைது செய்தனர்.  அப்போது வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்துதல் வேண்டும் எனக்கூறி போலீசாரை கண்டித்து, கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நந்தினி, நிரஞ்சனா ஆகிய 2 பேரை, போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரித்தனர். பின்னர், சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற அந்தியோதயா அதிவிரைவு ரயிலில் அவர்களை மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி