வாக்குச்சாவடி விவரம் இணையதளத்தில் பதிவு : சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சியின்200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடியின் விவரங்களை மாநகராட்சியின் இணையதள இணைப்பில் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையினை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரணத் தேர்தலையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் ஆண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளர்களுக்காக 255 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்காக 5284 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5794 வாக்குச்சாவடிகள் உள்ளன.  பெருநகர சென்னை மாநகராட்சியின் http://election.chennaicorporation.gov.in என்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்  இணையதளத்தில் Know your Zone and Division என்ற இணைப்பில் மண்டலங்கள் மற்றும் வார்டுகளின் அமைவிடங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் Know your Polling Station என்ற இணைப்பை கிளிக் செய்யும் பொழுது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதள இணைப்பில் மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகளின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச்சாவடி விவரம், வாக்காளர் பட்டியலின் பாகம் எண் மற்றும் வரிசை எண் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்