வாக்குச்சாவடி மையம் வேண்டும் மீனவ கிராமமக்கள் கோரிக்கை

 

ராமநாதபுரம், ஜூன் 25: திருவாடானை தொகுதி மோர்ப்பண்ணையில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியு நாட்டு படகு மீனவர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் மோர்பண்ணையை சேர்ந்த தங்கராஜ் உள்ளிட்ட மீனவ கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோர்பண்ணை மீனவர் கிராமத்தில் 2,046 பேர் வாக்காளர்களாக உள்ளனர். தேர்தல் நேரத்தில் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள உப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்படும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து வருகிறோம். மீனவர்களாக இருப்பதால் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வாக்களித்து விட்டு, மீண்டும் மீன் பிடி தொழிலுக்கு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே மோர்பண்ணை கிராமத்திலேயே வாக்குச்சாவடி மையம் அமைத்து தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை