வாக்குச்சாவடியை பார்வையிட சென்ற திமுக எம்எல்ஏ கார் உடைப்பு: அதிமுகவினர் அராஜகம்

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோயில் அருகே உள்ள வாக்குச்சாவடியை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபிநேசர் நேற்று காலை பார்வையிட சென்றார். அப்போது, அங்கிருந்த அதிமுகவினர் அவரை தடுத்து நிறுத்தி தகராறில் ஈடுபட்டதுடன், அவரது கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் தோல்வி பயத்தில் இந்த தொகுதியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், அமைச்சராக, சபாநாயகராக இருந்தவர் கூட்டமாக சென்று வக்குச்சாவடியை கைப்பற்ற முயன்றுள்ளார். அதற்கு சாட்சியாக வந்துவிடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த திமுக அனுதாபி ஒருவரை தாக்கியுள்ளார். இதுபற்றி புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோயில் அருகே உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட வந்த ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் கார் கண்ணாடியைையும் அதிமுகவினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதில், அவரது ஓட்டுனர் காயம்பட்டுள்ளார். அவரும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். தேர்தல் தோல்விக்கு காரணம் தேட முன்கூட்டியே இப்படி ஒரு கலவரத்தை நடத்தி முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்தவர் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். அவரே, இதை அவரது பேஸ்புக்கில் இதை பதிவிட்டுள்ளார்.மேலும், 54வது வட்டத்தில் அந்த அதிமுக வட்ட செயலாளர் துரை என்பவர் வாக்குப்பதிவு இயந்திரத்தையே எடுத்து உடைத்துள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை