வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை நேற்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.பின்னர் பெருமாள்பட்டு அரசினர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஈக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டேக்குகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் காஸ் சிலிண்டரில் இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ரதத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குப்பதிவு மையத்தினை பார்வையிட்டார். வாக்காளர் விழிப்புணர்வு ரதத்தில் பொறுத்தப்பட்டுள்ள அதிநவீன மின்னணு திரையில் திரையிடப்படும் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டு, பல்வேறு இடங்களில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை திரையிட வாக்காளர் விழிப்புணர்வு ரதத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை