வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

திருப்பூர், நவ. 19: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அறிவுரைப்படி, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக சிறப்பு சுருக்க முறை முகாம் நடைபெற்று வருகிறது. சிறப்பு சுருக்க முறை திருத்தத்தில் அதிகளவில் 18 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

18 வயது முதல் 29 வயதுடைய இளம் வாக்காளர்களிடம் இருந்து இதுவரை 9086 படிவங்கள் மட்டும் வரப்பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் விண்ணப்பங்கள் பெறும் காலம் அடுத்த மாதம் 9ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் உடனடியாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம் 6ஐ நேரிலோ அல்லது இணையதளம் வாயிலாகவோ அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை