வழிப்பறி செய்த வாலிபர் கைது

 

மதுரை, ஜூன் 14: மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி(55). இவர் நேற்று முன்தினம் மாலை செல்லூர் 50 அடி ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குலமங்கலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(27) என்பவர், செல்லப்பாண்டியை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.1,300ஐ பறித்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து, செல்லப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட ரஞ்சித்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை