வழக்கறிஞர் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும்: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தின் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர், ஒரு பெண்ணுடன் விரும்பத்தகாத வகையில் நடந்துகொண்ட விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் தனது உத்தரவில், இது சம்மந்தமான குற்ற வழக்கினை விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பான வீடியோ பதிவினை பரப்புவதற்கு தடை விதித்துள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் மேற்கூறிய வீடியோவை சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டெலிகிராம், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் பதிவிடவோ பரப்பவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். இதை மீறி செயல்படுபவர்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை