வலங்கைமான் ஒன்றியத்தில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள்

 

வலங்கைமான், மே 30: வலங்கைமான் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை திருவாரூர் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா நேரில் ஆய்வு மேற்கொண்டார். வலங்கைமான் அடுத்த கொட்டையூர் ஊராட்சியில் 2023,24ம் நிதியாண்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.6. 88 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாணவிகளுக்கான சுகாதார வளாக கட்டிடம் ரூ.11.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் தனி நபர்களுக்கான பண்ணை குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல மதகரம் ஊராட்சியில் 15. 25 லட்சம் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் வலங்கைமான் அடுத்த ஆலங்குடி ஊராட்சியில் மழைநீர் அளவீடு கட்டுமான பணிகளை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணி, அன்னுக்குடி ஊராட்சியில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடங்கள் புனரமைப்பு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகப் பணி, மாணிக்கமங்கலம் ஊராட்சியில் 1.90 லட்சம் மதிப்பீட்டில் ஆன பைப் லைன் அமைக்கும் பணி அரவூர் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 13.72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணி உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியர் பிரியங்கா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சிவக்குமார், ஒன்றிய பொறியாளர்கள், தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்