வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா

 

வலங்கைமான், மார்ச் 14: வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. வலங்கைமான் அடுத்த அரவூர் கிளியூரில் மாற்று கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா கொடியேற்று விழா நூற்றாண்டு துவக்க விழா ஆகியவை முப்பெரும் விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.சிபிஐ நூற்றாண்டு துவக்க கொடியை ஏற்றி வைத்து மாற்று கட்சியிலிருந்து 324 பேரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இணைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.முதல் கொடியை முன்னாள் கிளைச் செயலாளரும், முன்னோடி உறுப்பினருமான அம்மாசி ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2வது கொடியை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜா ஏற்றி வைத்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கி நூறாண்டை துவங்க இருப்பதால் நூற்றாண்டு விழா துவக்க கொடியை ஏற்றி மாவட்ட செயலாளர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்