வறட்சி துவங்கியுள்ளதால் வனவிலங்குகளுக்கு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்க கோரிக்கை

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் மே மாதங்கள் வரை வறட்சி காலமாகும். தற்போது வறட்சி துவங்கியுள்ளதால் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. புல்வெளி மற்றும் பசுமை மாறி அனைத்து இடங்களும் காயத்துவங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுகிறது.  வறட்சி காரணமாக நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் வறண்டு போவதால் வன விலங்குகள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவை தண்ணீர் தேடி நீண்ட தூரம் நடந்து செல்கின்றன. இந்நிலையில் சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி காலம் துவங்கியுள்ளதால் தண்ணீர் தேடி வனப்பகுதி வழியே வன விலங்குகள் இடம்பெயர்கிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அருவிகளில் கொட்டும் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் அவற்றின் மூலம் தண்ணீர் பருகி வந்தன. தற்போது வறட்சி துவங்கியுள்ளதால் நீர்வீழ்ச்சி, அருவிகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் யானை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி  சுற்றித்திரிந்து வருகிறது. எனவே வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் கண்டறிந்து தண்ணீர் தொட்டி அமைத்து வன விலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

10 நாட்களாக நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலை

சட்டவிரோத மதுபானம் தொடர்பாக புகாரளிக்க எண் அறிவிப்பு: செங்கல்பட்டு ஆட்சியர்

சென்னையில் குழந்தை திருமணம்: 18 புகார்கள் பதிவு