வரும் 21ஆம் தேதி 50,000 இடங்களில் 9ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: 9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி ஞாயிறன்று 50,000 முகாம்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 73% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 35% பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 50,000 இடங்களில் 8 வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் காலை 7 மணி முதல்,மாலை 7 மணி வரை  நடைபெற்றது.குறிப்பாக,சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 2000 இடங்களில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில்,தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி 9 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும்,தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் இதுவரை 73% பேருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி, 35% பேருக்கு 2 வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சனிக்கிழமை வரை வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்,அப்போது மாநிலம் முழுவதும் 50,000 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும்”,என்று தெரிவித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை