வரும் 18ம் தேதி அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை: அமமுக வெளியிடப்பட்ட அறிக்கை: அமமுக வளர்ச்சி பணிகள் குறித்த கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வருகிற 18ம் தேதி தொடங்கி வருகிற 21ம் தேதி வரை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டங்களில் அந்தந்த அணிகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.அதன்படி 18ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு இதயதெய்வம் அம்மா பேரவை, 19ம் தேதி (செவ்வாய்க்கிழமை) புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி, 20ம் தேதி (புதன்கிழமை) மகளிர் அணி, 21ம் தேதி (வியாழக்கிழமை) தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு மற்றும் கழக தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவுகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

பெரியமேடு கண்ணப்பர் திடலை சேர்ந்த 114 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பல்வேறு காவல் நிலையங்களில் பாஜ நிர்வாகி மீது காங்கிரசார் புகார்

திமுக கூட்டணியை பிளவுபடுத்தலாம் என்ற எதிர்க்கட்சியினரின் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது: ஆர்.எஸ்.பாரதி பேச்சு