வத்திராயிருப்பில் தயார் நிலையில் போக்குவரத்து பணிமனை.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை வேண்டுமென்று நீண்ட நாட்களாக வத்திராயிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து பணிமனை வேலை தொடங்கியது. வேலையானது ஆமை வேகத்தில் நடைபெற்றது. பணிமனையில் அடிப்படை வசதிகள் முழுமை அடையாத நிலையிலும் போக்குவரத்து பணிமனைக்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலை இருந்து வந்தது. போக்குவரத்து பணிமனைக்கு முன்பு உள்ள இடம் மேடு பள்ளமாக இருந்தாலும் செல்லக்கூடிய பாதையும் தார்ச்சாலை உள்ளிட்டவை போடப்பட வில்லை. அலுவலகத்திற்கு தேவையான உள்ளிட்ட சாதனங்கள் ரேக் மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் இல்லை.சட்டமன்ற தோ்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்ற அவசரத்தில் கடந்த பிப். 3ம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததாக கல்வெட்டு உள்ளது. ரூ.1 கோடியில் கட்டப்பட்ட போக்குவரத்து பணிமனை முழுமை அடையாமல் அவசரத்தில் திறந்தது அதிமுக ஆட்சியின் இயலாமையை காட்டியதாக மக்கள் எண்ணுகின்றனா். ஏனென்றால், எந்தவொரு கட்டிடத்தையும் முழுமையடையாமல் திறந்து வைத்ததோடு பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்பட்ட பணிமனை தமிழகத்தில் இதுவாகத்தான் இருக்கும். தற்போது புதிதாக வந்துள்ள திமுக அரசு பதவியேற்ற பின்பு வத்திராயிருப்பில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கான வேலைகளை துரிதப்படுத்தி அலுவலகத்திற்கு தேவையான உள்ளிட்ட சாதனங்களை கொடுத்துள்ளது. பணிமனைக்கு முன்பு உள்ள மேடு பள்ளங்களை சீரமைத்து டீசல் பல்க் வேலை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த போக்குவரத்து பணிமனை திறப்பதற்கான நடவடிக்கை தொடங்க உள்ளது. குறைந்தது 30 பஸ்கள் வரை இந்த பணிமனையிலிருந்து இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் வத்திராயிருப்பிலிருந்து திருச்செந்தூர் பழனி கோவை திருப்பூர் சேலம் திருச்சி உள்ளிட்ட தொலைதூர ஊா்களுக்கு பஸ்கள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் வத்திராயிருப்பை மையமாக வைத்து வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறை பிளவக்கல் அணை அத்திக்கோயில் உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு அரசு பஸ்கள் கூடுதலாக இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது….

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!