வத்திராயிருப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

வத்திராயிருப்பு: தமிழகத்தில் ஏப்ரல் 2வது வாரத்தில் ெகாரோனா தொற்று பாதிப்பு 20 என்ற நிலையில் இருந்தது. தற்போது ஒரு நாளைக்கு 1400 ஆக மாறி உள்ளது. தமிழகத்தில் பிஏ.5, பிஏ.2.38 வகை வைரசால்தான் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு அதிகரிப்புக்கு இந்த வகை வைரஸ்தான் காரணம் என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.எனவே, சந்தைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற 26 சதவீதம் பேருக்கும், அலுவலகங்கள், பணியிடங்களிலிருந்து 18 சதவீதம் பேருக்கும், 16 சதவீதம் பேருக்கு பயணத்தின்போதும், 12 சதவீதம் பேருக்கு கல்வி நிறுவனங்களுக்குச் சென்றபோதும் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.எனவே, வருவாய்த்துறை, போலீஸ், உள்ளாட்சி அமைப்புகள் கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்: அலுவலகங்கள், பணியிடங்களுக்கு வருவோருக்கு தினந்தோறும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். காய்ச்சல் அதிகமாக இருந்தால் அவர்களை பரிசோதனைக்கோ அல்லது தனிமைப்படுத்திக்கொள்ள அனுப்பி வைக்க வேண்டும். எப்போதும் முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும். கை கழுவும் வசதிகளை வளாகத்தில் ஏற்படுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். காற்றோட்டமான வகையில் பணியிட அறைகள் இருத்தல் முக்கியம். இது, தொற்று பாதிப்பு பரவுவதை குறைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.அதன்படி, வத்திராயிருப்பின் பல்வேறு பகுதிகளில் போலீசார், மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். குறிப்பாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாஸ்க் கொடுத்து மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், ஒஎபி தாசில்தார் சின்னத்துரை, வருவாய் துறை ஆய்வாளர்கள் பவுன்செல்வி, சிவராமசுப்பிரமணியன் சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா, சரவணக்குமார் லோகேஸ், ஆனந்த் உள்ளிட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ேமலும், இன்று முதல் முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்