வத்தலக்குண்டுவில் தக்காளி கிலோ ரூ.70க்கு விற்பனை: வரத்து கூடியதால் விலை குறைந்தது

 

வத்தலக்குண்டு, ஆக.4: வத்தலக்குண்டுவை சுற்றிய கிராமங்களில் தக்காளி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு வந்ததாலும், ஆடி 18க்கு ஏராளமானோர் வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்றதாலும்

முதல் நாள் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஒரே நாளில் ரூ.50 குறைந்து ஒரு கிலோ ரூ70க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல நாளாக தக்காளி வாங்க முடியாத நிலையில் இருந்த ஏராளமானோர் நேற்று தக்காளி வாங்கி ஆடி 18 நல்ல நாளை சிறப்பாக கொண்டாடினர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை