வண்டிப்பாதையை மீட்க கோரி கல்லுப்பட்டி மக்கள் போராட்டம்

திருச்சுழி, ஆக.26: காரியாபட்டி அருகே உள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான கண்மாய் பகுதி மற்றும் கிராமத்தின் அருகே உள்ள வாழவந்தம்மன் அய்யனார் கோவிலுக்கு செல்வதற்கு வண்டிப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பாதை ஒரு சிலரின் பட்டா இடமாக இருப்பதால் அப்பகுதி வழியாக செல்ல முடியாத அளவிற்கு அடைத்து விட்டனர். தற்போது பொதுமக்கள் கண்மாய் மற்றும் கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

எனவே வண்டிப்பாதையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி கிராம மக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், வருகின்ற 29ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதன் பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை