வண்டலூர், கிண்டி பூங்காவில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதை அகற்றும் பணியினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்காவில் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் மரங்கள் விழுந்துள்ளதை அகற்றும் பணிகள் நடைபெறுவதை வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாண்டஸ் புயலால் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைப்பெற்றுவருவதையும் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டுள்ளதையும், புலி கூண்டு மற்றும் விலங்குகள் உள்ள பகுதிகளில் புயலால் பாதிப்புகள் உள்ளதையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா வளாகத்தில் புயல் மழையினால் முற்றிலும் சாய்ந்துள்ள ஆலமரம் பொக்லின் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெறுவதையும் இரண்டு இடங்களில் சுற்றுச்சுவர் விழுந்துள்ளதையும் அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கிண்டி சிறுவர் பூங்கா ரூபாய் 20 கோடி மதிப்பில் புணரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டும் என்று தெரிவித்தார். மேலும் இந்த புயலினால் வனப்பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மரங்களின் விவரங்கள் மற்றும் இதர சேதங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார். பூங்கா சீரமைப்பு பணிகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆய்வுகளின் போது வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர் சீனிவாஸ் ரா ரெட்டி., துணை இயக்குநர் கஞ்சனா, கிண்டி சிறுவர் பூங்கா வனஉயிரினக் காப்பாளர் ஈ.பிரசாந்த், மற்றும் அலுவலர்கள் புயல் பாதிப்பு குறித்து தெரிவித்தார்கள்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு