வடமதுரை அருகே கிணற்றில் விழுந்த பசு மாடு மீட்பு

வடமதுரை, ஜன. 21: வடமதுரை அருகே தும்மலக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 10 பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு பசு தோட்டத்தில் இருந்த சுமார் 60 அடி ஆழ கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பசு நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தது. கிணற்றில் 25 அடி அளவுக்கு தண்ணீர் இருந்ததால் பசு தத்தளித்து கொண்டிருந்தது.
பசு மாட்டின் சத்தம் கேட்டு வந்து பார்த்த பார்த்திபன் இதுகுறித்து உடனே வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி பசு மாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி