வடமதுரையில் டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வடமதுரை, ஜூலை 2: வடமதுரை நகரில் முக்கிய இடமாக மந்தைக்குளம் உள்ளது. இந்த குளத்தை பேரூராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தி, பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு வசதியாக பேவர் பிளாக் கல் பதித்துள்ளது. இதன் மொத்த சுற்றளவு 1 கி.மீ. ஆகும். இந்த நடைபாதையில் தினமும் காலை, மாலையில் ஏராளமானோர் நடைபயிற்சி சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்ந நடைபாதையின் கிழக்கு பகுதியில் ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் நடுவில் உள்ளது. உயரம் குறைவாக உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை சுற்றி இரும்பு வேலி அமைக்கபட்டுள்ளது. எனவே மின்சார வாரியத்தினர் தொடக்கூடிய வகையில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை அகற்றி வேறொரு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்