வடக்கு மண்டலத்தில் மக்கள் குறைதீர் முகாம்

மதுரை, ஏப்.12: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மண்டலத்தலைவர் சரவணபுவனேஸ்வரி முன்னிலையில் நேற்று நடந்தது. மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடந்த பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 18 மனுக்களும், புதிய வரி விதிப்பு வேண்டி 6 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 1 மனுவும், வரிப் பிரிவினை கேட்டு மனு, புதிய குடிநீர் குழாய் இணைப்பு வேண்டி மனு, சொத்துவரி, ஆக்கிரமிப்பு மற்றும் சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட இதர கோரிக்கைகள் கேட்டு 33 மனு, இதர மண்டலத்தைச் சார்ந்த 3 மனுக்கள் என மொத்தம் 63 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இம்முகாமில் துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்செயற்பொறியாளர் (திட்டம்) அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை