வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வெள்ள தடுப்பு உபகரணங்கள் தயார்

 

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம், தலைவர் டி.காமராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை மாமன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். இதற்கு, பதிலளித்த மண்டல தலைவர் டி.காமராஜ், கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் எங்கெல்லாம் தண்ணீர் நிற்குமோ, அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் தேங்கி நிற்காமல் உடனடியாக வெளியேறும்படி வழி செய்யவும், மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மரம் அறுக்கும் இயந்திரங்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள், மீட்பு பணி பாதுகாப்பு காலணிகள், தலைகவசங்கள், ரெயின் கோட், குடைகள், டார்ச் லைட்கள், பொக்லைன் இயந்திரங்கள் என அனைத்தும் உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளதாக மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ் தெரிவித்தார்.

மேலும், மழை சம்பந்தமான எந்த ஒரு புகார்களாக இருந்தாலும் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். பாதிப்புகளை சரி செய்ய மண்டல அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். மழை பாதிப்புகள் குறித்து மாநகராட்சி கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தவுடன் மண்டல அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். இதில் பல்வேறு பணிகளுக்காக ரூ.10.44 கோடியில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி