லிப்ட் கொடுத்ததால் சோதனை சிறுவனை தாக்கி பைக் பறிப்பு: 2 பேர் கைது

பெரம்பூர்: லிப்ட் கேட்பதுபோல் நடித்து சிறுவனை தாக்கி பைக்கை பறித்துச்சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி பி.கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகன் சரண் (16). இவர் புளியந்தோப்பு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து பைக்கில் வியாசர்பாடி சுந்தரம் தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது சிறுவனின் பைக் இரண்டு பேர் மறித்து நிறுத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் சிறுவனிடம், அந்த தெருமுனையில் எங்களை விட்டுவிடு என்று கூறியுள்ளனர். இதற்கு சிறுவன் சம்மதம் தெரிவித்ததால் சிறுவனை பைக்கின் பின்பக்கம் அமரவைத்துவிட்டு ஒருவன் சிறுவனின் பின்னால் அமர்ந்து கொள்ள மற்றொரு நபர் பைக்கை ஓட்டிச்சென்றுள்ளார். சிறிது தூரம் வந்தவுடன் சிறுவனை இறக்கிவிட்டு விட்டு கையால் தாக்கிவிட்டு பைக்கை ஓட்டிக்கொண்டு தப்பிவிட்டனர்.இதையடுத்து அழுதபடி வீட்டுக்கு வந்த சிறுவன், பைக் திருட்டுப்போனது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மாவதி வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில், ஏற்கனவே பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட 2 பேர்தான், சிறுவனை தாக்கி பைக்கை திருடிச்செல்வது பதிவாகியிருந்தது.இதன்படி புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (25), ஐஸ்அவுஸ் லாயிட்ஸ் காலனி ரோட்டை சேர்ந்த ராஜா (எ) பிள்ளைய்யா (42) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து சிறுவனின் பைக்கை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை: வாலிபர் கைது

விமானத்தில் அழைத்து வந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து மெகா பிசினஸ்: வாட்ஸ் அப் மூலம் தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு பெண்கள், அழகிகள் சப்ளை

கொளத்தூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருந்த டெலிவரி ஊழியர்கள் 2 பேர் கைது