கமுதி, ஜூன் 21: அருப்புக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி ஒன்று எம்.சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு கமுதி நோக்கி வந்துள்ளது. டிப்பர் லாரியை உச்சபுளியைச் சேர்ந்த முனியசாமி(39) ஓட்டி வந்துள்ளார். அப்போது மேலராமநதி கிராமம் அருகே வந்த போது, எதிரே வந்த மினி வேன் மீது டிப்பர் லாரி மோதியதில்,மினி வேனை ஓட்டி வந்த டிரைவர் அயன்ராஜ்(42), கிளீனர் பாண்டி (50) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரையும் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். இதில் கிளீனர் பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி கிளீனர் பலி
previous post