லாரி திடீரென்று பழுதானதால் நெல்லை ஜங்ஷன் மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி

நெல்லை: நெல்லை ஸ்ரீபுரத்தில் உணவுப் பொருள் கிட்டங்கி உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து ரயில்களில் வரும் அரிசி, கோதுமை மூடைகள் இந்த கிட்டங்கியில் இறக்கி வைக்கப்பட்டு, நெல்லை, தென்காசி தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு லாரிகளில் ெகாண்டு செல்லப்படும். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் ஸ்ரீபுரம் கிட்டங்கியிலிருந்து அரிசி மூடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி ஸ்ரீபுரம் தபால் அலுவலகத்துக்கு எதிரே மேம்பால நுழைவு வாயிலில் திடீரென்று பழுதாகி நின்றது. இதனால் மேம்பாலத்திலும், டவுன் ஆர்ச் வரை  இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் வாகனங்களை ஸ்ரீபுரம்- தச்சநல்லூர் வழியாகவும், மேம்பாலத்தின் கீழ் உள்ள சர்வீஸ் ேராடு வழியாகவும் திருப்பி விட்டனர். அதன் பின்னர் மீட்பு வாகனம் மூலம் லாரியை போலீசார் சாலையோரம் ஒதுக்கி விட்டனர். இதைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து சீரானது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் லாரி பழுதாகி நின்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு