லஞ்சம் வசூல் துணை தாசில்தார் மீது வழக்கு

கோவை: கோவை வடக்கு தாசில்தார் கோகிலாமணி கடந்த வாரம் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் தாசில்தார் பல்வேறு ஆவணங்கள், பட்டா மாறுதல், பொதுமக்களுக்கான நல திட்டங்கள் வழங்க லஞ்சம் வாங்கி வந்தது தெரியவந்தது. மேலும்,  வடக்கு தாலுகா துணை தாசில்தார் செல்வம் என்பவரும் லஞ்சம் கேட்டு நெருக்கடி தந்துள்ளது தெரிய வந்தது. உடல் நலக்குறைவால் ரெய்டு நாளில் செல்வம் பணிக்கு வரவில்லை. இருப்பினும் செல்வம் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு