ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸின் நாட்டியஞ்சலி நிகழ்ச்சி

 

கோவை, செப்.2: ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸ் சார்பாக நாட்டியஞ்சலி நிகழ்ச்சி கோவை கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று துவங்கியது. வரும் 3ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை ராமகிருஷ்ணா மிஷன் துணை செயளாலர் சுவாமி நிர்மலேஷானந்தா துவக்கி வைத்தார்.

பரதநாட்டியம் தஞ்சாவூர் கலா வித்யாலயாவின் ரோஸினி விஜயன், பெங்களூர் பரதநாட்டிம் சித்கலா ஸ்கூல் ஆப் டான்ஸ் பிரவீன் குமார் மற்றும் குச்சுபுடி பாரப்பரா பவுண்டேஷன் திபா சந்திரன் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் மெட்ரோபாலிஸின் தலைவர் நாராயணன், திட்டத் தலைவர் குருமூர்த்தி, துணை தலைவர் கே.ஆர். முரளி, செயளாலர் அருண் பிரசாத் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை