ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி தினமும் 15 டன் விற்பனை

 

ஈரோடு, ஆக.2: ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலை தக்காளி தினமும் சராசரியாக 15 டன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிலோ ரூ.150 வரை வெளிச்சந்தைகளில் விற்பனையாகி வருகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் மேலும் 500 ரேஷன் கடைகளுக்கு மலிவு விலை தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 15 ரேஷன் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  கூட்டுறவுத்துறை சார்பில் தாளவாடி பகுதிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.95 வரை கொள்முதல் செய்யப்ப்டு பொதுமக்களுக்கு ரூ.60 வீதம் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஒரு அட்டை தாரருக்கு ஒரு கிலோ வீதம் வழங்கப்படுவதாகவும், தினமும் சராசரியாக 15 டன் தக்காளி பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை