ரூ.5 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு

புழல்: சோழவரம் ஒன்றியம் ஆங்காடு ஊராட்சியில் சுமார் 92 சென்ட் புஞ்சை தரிசு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதை அகற்றக்கோரி பொதுமக்கள் சார்பில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் சோழவரம் வருவாய்த்துறைக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா நித்தியானந்தம் தலைமையில், சோழவரம் வருவாய்த்துறை ஆய்வாளர் மதன், கிராம நிர்வாக அலுவலர் ஷர்மிளா, ஊராட்சி துணை தலைவர் மதன்ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆக்கிரமிப்பு இடத்துக்கு நேற்று நேரில் சென்றனர். அப்போது, ஆக்கிரமிப்புகளை ஆய்வுசெய்து அங்கிருந்த கற்களை அகற்றி எச்சரிக்கை பலகை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. …

Related posts

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்