ரூ.45,000 சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம்: ஐகோர்ட் அதிரடி

சென்னை : உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவிட்டும் காவலர் குடியிருப்பை காலி செய்யாத மாணிக்கவேல் என்பவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் குறித்து கேள்வி எழுப்பினார்.ஆர்டர்லி முறை குறித்து உடனடியாக கவனத்தில் கொள்ளுமாறு டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாகவும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45,000 சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம் என்று நீதிபதி கூறினார். ஓய்வுபெற்ற காவல்துறையினர் நீதிபதிகள் வீடுகளில் உள்ள காவலர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், சொந்த பயன்பாட்டிற்காக ஆர்டர்லிகளை வைத்திருக்கும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை ஜூலை 25ம் தேதிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் ஒத்திவைத்தார்.  …

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு