ரூ.3.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

கூடுவாஞ்சேரி:  கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், நேற்று காலை  சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் நுழைந்தனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர், தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்தனர்.பின்னர் அங்கு 21 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 238 கிலோ குட்கா பொருட்களுடன் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, உமரிக்காடு கிராமம், அருணாசலசாமி கோயில் தெருவை சேர்ந்த இளங்கோவன் (51). குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து ஊரப்பாக்கம் பகுதிகளில் கடைகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சப்ளை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சி முத்தமிழ்நகர், 5வது தெருவை சேர்ந்த அய்யனார் (47) என்பவர், தனது வீட்டில் 17 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 169 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மேற்கண்ட பகுதிகளில் பறிமுதல் செய்த குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.3.5 லட்சம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!