ரூ.26.20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி : ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 95 விவசாயிகள் 624 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர். அவை தரம் பிரித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில் முதல் தரம் 322 மூட்டை கொப்பரை ரூ.90 முதல் 92 வரையிலும், 302 மூட்டை 2ம் தர கொப்பரை ரூ.72 முதல் 87.50 வரை என 34 டன் கொப்பரை மொத்தம் ரூ.26.20 லட்சத்துக்கு ஏலம் போனது. அதனை 10 வியாபாரிகள் கொள்முதல் செய்ததாக ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்….

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்