ரூ.2,48,207 விலை: கேபிள் இணைப்பு, டிஷ், மின்சார வயர் உள்ளிட்ட எந்த வயரும் இல்லாமல் இயங்கும் டி.வி. விரைவில் வருகிறது..!!

அமெரிக்கா: கேபிள் இணைப்பு, டிஷ், மின்சார வயர் உள்ளிட்ட எந்த வயரும் இல்லாமல் இயங்கும் தொலைக்காட்சி சாதனம் விரைவில் வர உள்ளது. புதிய வயர்லெஸ் டி.வி. தொழில்நுட்பத்தை டிஸ்பிளேஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. புதிய தொலைக்காட்சி சாதனத்தை சுவரில் பொருத்துவதற்குக் கூட ஸ்டாண்ட் தேவையில்லை என டிஸ்பிளேஸ் நிறுவனம் கூறுகிறது. வெற்றிட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொலைக்காட்சி சாதனத்தை சுவரில் அழுத்தினால் அப்படியே ஒட்டிக்கொள்ளும். புதிய டி.வி.யில் அகற்றி ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் உள்ளதால், தனியே மின் இணைப்பு கொடுக்க வேண்டியது இல்லை. புதிய டி.வி.க்கு ரிமோட் கிடையாது; டி.வி.யில் உள்ள கேமரா, பார்வையாளரின் கை அசைவுக்கு ஏற்ப இயங்கக் கூடியதாகும். குரல் வழி ஆணை மூலமே வேண்டிய சேனல்களை பார்க்கவும், டி.வி.யை அணைக்கவும் முடியும். இவ்வாண்டுக்குள் அமெரிக்க சந்தைக்கு வர உள்ள 55 அங்குல வயர்லெஸ் டி.வி. விலை ரூ.2,48,207ஆக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. …

Related posts

பிஎம்டபிள்யூ சிஇ 04

ஜிடி டெக்சா எலக்ட்ரிக் பைக்

பிகாஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்