ரூ.24 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை

 

காங்கயம், ஜூலை 31: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.24 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர், பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரம்தோறும் ஞாயிற்று கிழமையன்று நடைபெறுகிறது. நேற்றைய சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து 127 காங்கயம் இன பசு, காளை, எருது, கன்றுகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் 65 மாடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.24 லட்சம் ஆகும். அதிகபட்சமாக 9 மாத சினை மாடு ரூ.86 ஆயிரத்திற்கு விற்பனையானது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு