ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக கேரள தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி:தம்பதி கைது

சென்னை: தொழில் வளர்ச்சிக்காக ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக கேரள தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரள மாநிலம் மாரைக்காடு பகுதியை சேர்ந்த உமர் (60) என்பவர் கடந்த மாதம் புகார் ஒன்று அளித்தார்.அதில், கேரள மாநிலம் மாரைக்காடு தானத்பரன்பில் ‘நவரத்னா ஹைப்பர் மார்க்கெட்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறேன். தொழில் வளர்ச்சிக்காக கடன் பெற முயற்சி செய்த போது, சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (63), அவரது மனைவி ராமலட்சுமி (43) ஆகியோர் என்னை அணுகினர். நாங்கள் ஸ்ரீபாலாஜி டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறோம் என்றனர்.  பிறகு எனது தொழில் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி கடன்  பெற்று தருவதாக உறுதி அளித்தனர். அதற்காக பிராஸசிங் கட்டணம் மற்றும் டாக்குமெண்ட் கட்டணம் என முன்கூட்டியே ரூ.50 லட்சம் தர வேண்டும், என்றனர். அதன்படி நான் அவர்களிடம் ரூ.50 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் சொன்னபடி அவர்கள் ரூ.100 கோடி கடன் பெற்று தராமல், ஏமாற்றிவிட்டனர். எனவே, அவர்களிடம் இருந்து எனது பணத்தை பெற்று தரவேண்டும், என்று கூறியிருந்தார். புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோர் தொழிலதிபர் உமரிடம் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், இந்த மோசடி தம்பதி பாலாஜி என்பவரிடம் மருத்துவ கல்லூரி சீட் வாங்கி தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.75 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது.அதைதொடர்ந்து திருநெல்வேலியில் தலைமறைவாக இருந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்….

Related posts

பசுபதி பாண்டியன் ஆதரவாளர் எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது

கேரளாவில் உள்ள ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை கொள்ளையடித்து கன்டெய்னரில் தப்பிய வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை

லஞ்சம் வாங்கிய விஏஓ நண்பருடன் கைது