ரூ.1.88 கோடியில் கட்டப்படும் அறிவுசார் மையத்திற்கு பூமி பூஜை

பரமக்குடி, ஏப்.11: பரமக்குடியில் அறிவுசார் மையம் அமைக்க, புதிய கட்டிட பூமி பூஜையை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.88 கோடியில் அறிவுசார் மையம் அமைக்க பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கியது. நேற்று, காலை நடைபெற்ற பூமி பூஜையை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவர் சேது.கருணாநிதி, துணைத் தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் திருமால் செல்வம், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கருப்பையா, நகராட்சி பொறியாளர் மீரா அலி, இளநிலை பொறியாளர் சுரேஷ்பாப உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி