ரூ.1.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம்,ஜூலை30: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.82 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு வர்த்தகம் நடந்தது. காங்கயம் அருகே முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் ஏலம் ஏலம் நடைபெறும். அதன் படி நேற்று நடந்த ஏலத்தில் 2360 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.82.30க்கும், குறைந்த பட்சமாக ரூ.58.15க்கும்,சராசரியாக ரூ.80.35 க்கும் என, மொத்தம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்துக்கு விற்பனையானது.அதேபோல் 5405 கிலோ தேங்காய் விற்பனைக்கு வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.23.75க்கும், குறைந்த பட்சமாக ரூ.17.35க்கும்,சராசரியாக ரூ.22.75க்கும் என, மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்துக்கு விற்பனையானது.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை